சிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாம்!!

Report Print Nalini in உணவு

பொதுவாக கடைகளில் வாங்கி வந்த சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சிலருக்கு வழக்கமாக உள்ளது. சிலர் இதில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள்.

இருப்பினும் இப்படி வைத்து சாப்பிட்டால் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை யாரும் யோசித்து கூட பார்த்ததில்லை. இந்த மாதிரி பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வழியே உள்ளே செல்லும். அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் ஏற்படும். இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக உள்ளது.

பிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்குகின்றன. இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை ஏற்படுகிறது.

சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை ஏற்படும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணமாகவும் ஏற்படுகின்றன.

பக்டீரியா தொற்றுக்கள் தொண்டையில் ஏற்பட்டு தொண்டையில் டான்சில், தைராய்டு போன்ற பிரச்னைகளை உண்டாக்கி விடுகின்றன, ஜீரணக்கோளாறுகளை உருவாக்குகின்றன.

சிக்கன் மூலமாக பக்டீரியா தொற்று ஏற்பட்டு நுரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

பிறப்புறுப்புகளை பக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்த உணவுகளை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பக்டீரியா தொற்றுக்கள் உண்டாகும் உயிருக்கு உலை வைத்துவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்