வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க..

Report Print Kavitha in உணவு
841Shares

தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர்.

இதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுப்பது அவசியமானது ஆகும். இதிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின்-சி முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவதால் சளி, காய்ச்சல் போன்ற எவ்வித வைரசுக்களும் நம்மை அண்டாது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பாலிபினைல் என்னும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது. மேலும் நம் உடல் மற்றும் தோல் நலனுக்கும் இது உதவுகிறது. இதனை நாம் அன்றாட உணவில் ஊறுகாய் வடிவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

  • குடைமிளகாயை பயன்படுத்தி பாஸ்தா, பிரைட் ரைஸ், சான்விச் போன்ற பலவிதமான உணவு வகைகளை சமைக்கலாம்.

  • ஆரஞ்சு பழத்தை தினசரி உண்பதன் மூலம் வைட்டமின் சி-யின் அளவை அதிகரித்து உடலுக்கு வலுசேர்க்கிறது.

  • கொய்யா பழம் பெரும்பாலும் குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு அதிகப் பலன் கிடைக்கும்.

  • பப்பாளி நம்முடைய எதிர்ப்பு சக்திக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.

  • துரித உணவுகள் உண்பதை தவிர்த்து, எலுமிச்சைச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்து பலன்பெறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்