கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம்?

Report Print Kavitha in உணவு
205Shares

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது.

இருப்பினும் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் உடலில் மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி கொண்டே உள்ளது.

இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதே சிறந்தது.

அந்தவகையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

கலோரிகள்

உணவில் அரிசி, உருளைக்கிழங்கு, ரொட்டி, பாஸ்தா, முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த சமயத்தில் கலோரிகள் குறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். துரித உணவுகளையும் அறவே ஒதுக்கிவிட வேண்டும்.

புரத உணவுகள்

  • சைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் பயறு, பருப்பு வகைகள், பால் பொருட்கள், சோயா பொருட்கள், நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

  • அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி இறைச்சி, முட்டை, மீன் சாப்பிடலாம்.

பழங்கள்

ஆப்பிள், வாழைப் பழங்கள் முதல் சுரைக்காய், பச்சை இலை காய்கறிகள் வரை அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மூலிகைகள் மற்றும் சில மசாலாப் பொருட்கள்

பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் நிரம்பியுள்ளன. மஞ்சள் கலந்த பால், கிரீன் டீ, ஹெர்பல் டீ போன்றவை சிறந்தது. இவைகளை தொடர்ந்து பருகி வரலாம்.

திரவ உணவுகள்

  • தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

  • ரசம், சூப் வகைகளை அன்றாட உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ள வேண் டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்