பெண்களின் கருப்பையை வலிமையாக்கும் உளுந்தங்கஞ்சி

Report Print Nalini in உணவு

உளுந்தங்கஞ்சி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும், முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.

முக்கியமாக விளையாட்டு வீரர்கள். ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.

மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

இது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆண்களும் குடிப்பதில் தவறில்லை. இருப்பினும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்சனைகள், போன்ற ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும்.

வாரத்திற்கு மூன்று நாள் குடித்தால் கூட போதும். ஒரே மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உளுந்தங்கஞ்சி செய்முறை
  • உளுந்தம்பருப்பு இரண்டு டம்ளர்
  • பச்சரிசி ஒரு டம்ளர்
  • வெந்தயம் இரண்டு தேக்கரண்டி
  • பூண்டு 40 பல்லு
  • வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்
  • தேங்காய் ஒரு மூடி
செய்முறை

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும்.

(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்து விடும்.

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு தேங்காய் அரைத்து பாலும் எடுத்து கொள்ள வேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடலாம். வேண்டும் என்றால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இவற்றை தவிர்த்துவிடுவது நல்லது, செரிமானப் பிரச்சனை இருப்பவர்களும் சாப்பிட வேண்டாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்