இந்த ஜூஸை தொடர்ந்து குடிங்க... இதய நோய் வராமல் தடுக்கும்!

Report Print Kavitha in உணவு
132Shares

அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக் கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி.

சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் அடங்கியுள்ளது.

தொண்டைப்புண்,தோல் பிரச்சினை, சொரி, சிறங்கு, வயிற்று புழுக்கள், மூட்டுகளில் வீக்கம் போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அதிலும் புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

தற்போது அந்த ஜூஸை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • புளிச் சாறு - அரை கப்
  • நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
  • எலும்பிச்சை துண்டுகள் - 1
  • தண்ணீர் - விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை

புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.

தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்