யூரோ கிண்ணம்: “நாக்- அவுட்” சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

Report Print Jubilee Jubilee in கால்பந்து
யூரோ கிண்ணம்: “நாக்- அவுட்” சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

பிராசில் 15வது ஐரோப்பிய கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், "நாக்-அவுட்" சுற்றுக்கு 16 அணிகள் முன்னேறியுள்ளன.

இந்த தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இவை அனைத்தும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. "லீக்" சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் "நாக்-அவுட்" சுற்றுக்கு தகுதி பெறும்.

அதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகளில் "டாப்-04" நாடுகளும் "நாக்-அவுட்" தகுதி பெறும். மற்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இந்த நிலையில் நேற்றுடன் "லீக்" ஆட்டங்கள் முடிந்தன. இதன்படி,

"நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறிய அணிகள் விவரம்

“ஏ” பிரிவு- பிரான்ஸ், சுவிட்சர்லாந்து.

“பி” பிரிவு- வேல்ஸ்,இங்கிலாந்து, சுலோவாக்கியா.

“சி” பிரிவு- ஜெர்மனி, போலந்து, வடக்கு அயர்லாந்து.

“டி” பிரிவு- ஸ்பெயின், குரோஷியா.

“இ” பிரிவு- இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு.

“எப்” பிரிவு- அங்கேரி, ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல்.

வெளியேற்றப்பட்ட அணிகளின் விபரம்

“ஏ” பிரிவு- அல்பேனியா, ருமேனியா.

“பி” பிரிவு- ரஷ்யா.

“சி” பிரிவு- உக்ரைன்.

“டி” பிரிவு- துருக்கி, செக்குடியரசு.

“இ” பிரிவு- சுவீடன்.

“எப்” பிரிவு- ஆஸ்திரியா.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவுகள்

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments