யூரோ 2016: கடினமாக போராடி அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி

Report Print Deepthi Deepthi in கால்பந்து
யூரோ 2016: கடினமாக போராடி அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி

யூரோ கிண்ணம் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி பெனால்டி ஷுட் அவுட் முறையில் 6-5 என்ற கோல்கணக்கில் இத்தாலியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதியில் உலக சாம்பியானான ஜெர்மனி அணி, கிண்ணத்தை வெல்லும் நோக்கில் ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாட தொடங்கியது.

இதற்கு சற்றும் சளைக்காமல் இத்தாலி அணியும் ஆடவே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

ஜெர்மனி அணியின் மேசட் ஓசில் ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் 78-ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் வீரரான லியனார் போனுகி ஒரு பெனால்டி ஷுட் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து இரு அணிகளின் கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்படவே இரு அணிகளும் சமநிலையிலேயே சென்றது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்று சமமாக இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதிலும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷுட் அவுட் முறை கொடுக்கப்பட்டது. ஆனால் 5 பெனால்டி ஷுட் அவுட் முறையிலும் வெற்றியாளரை தீர்வு செய்யமுடியவில்லை.

இதனால் தலா 8 பெனால்டி ஷுட் அவுட் முறை வழங்கப்பட்ட நிலையிலும் இரு அணிகளும் 5-5 என சமநிலையில் இருந்தன. இதை தொடர்ந்து 9-ஆவது பெனால்டி ஷுட் அவுட் முறை வழங்கப்பட்டு அதை முதலில் பயன்படுத்திய இத்தாலி அணியின் வீரரான டார்மியான், வாய்ப்பை தவற விடவே ஜெர்மனியின் ஹெக்டேர் கோல் அடித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

மிக கடினமான போராட்டத்திற்கு பிறகு 6-5 என்ற கோல்கணக்கில் இத்தாலியை வீழ்த்தி அரயிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி. இதைத் தொடர்ந்து அரயிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஜெர்மன் அணி மோதவுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments