வாரத்திற்கு ரூ.2 கோடி: அசத்தும் போக்பா

Report Print Fathima Fathima in கால்பந்து
வாரத்திற்கு ரூ.2 கோடி: அசத்தும் போக்பா

யூரோ உலகக் கிண்ணப் போட்டியில் அசத்திய மிட்பீல்டர் பால் போக்பாவின் வாரச் சம்பளம் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நடந்த யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதற்கு அந்த அணியில் விளையாடிய கீரிஸ்மானும், மிட்பீல்டர் பால் போக்பாவும் தான் காரணம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போக்பா, இத்தாலியின் முன்னணி கிளப்பான ஜூவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2011-12ல் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகத்தான் விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் கோல் ஏதும் அடிக்காததால், ப்ரீ டிரான்ஸ்பர் மூலமாக ஜூவான்டஸ் அணியில் இணைந்தார்.

தற்போது மீண்டும் மான்செஸ்டர் அணி போக்பாவை வாங்க பேரம் பேசியது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜூவான்டஸ் போக்பாவை விடுவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது போக்பாவை விட்டுக்கொடுக்க ஜூவான்டஸ் முடிவு செய்துள்ளது.

மேலும் மான்செஸ்டர் அணி போக்பாவிற்கு வாரத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments