மெஸ்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி!

Report Print Basu in கால்பந்து

உலகின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரரும், அதிக ரசிகர்களை கொண்டவருமான லியோனல் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

லா லிகா தொடரில் பார்சிலோனா-அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான 1-1 என டிராவில் முடிந்ததது. இந்த போட்டியின்போது, மெஸ்சியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வெனிசுலா அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் உலக கோப்பை தகுதி சுற்று போட்டியையும் காயம் காரணமாக மெஸ்சி தவற விட்டார் என்பது நினைவுக் கூரதக்கது.

முன்னதாக பொரஸியா மோனோசென்க்ளாட்பாஹ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டி, ஸ்போர்ட்டிங் ஜிஜோன், செல்டா விகோ அணிகளுக்கு எதிரான லா லிகா போட்டிகள், பெரு மற்றும் பராகுவே அணிகளுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஆகியவற்றை மெஸ்சி தவற விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில், அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ள மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியின்போது, பார்சிலோனா அணிக்கு மெஸ்சி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments