சிக்கலில் இருந்த அர்ஜென்டினா: காப்பாற்றிய மெஸ்ஸியின் ப்ரீ-கிக் கோல்

Report Print Santhan in கால்பந்து

உலகக்கிண்ணம் கால்பந்து போட்டி தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த பிரீ கிக் கோல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வரும் 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் கடந்த செவ்வாய் கிழமையில் கொலம்பியா அணியும், அர்ஜென்டினா அணியும் மோதினா.

அர்ஜென்டினா அணி கடந்த வாரம் பிரேசில் அணியுடன் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அர்ஜென்டினாவின் Estadio San Juan del Bicentenario மைதானத்தில் களமிறங்கியது.

அதன் படி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை செயல்படுத்தி வந்தனர். இதன் காரணமாக கோல் அடிப்பதற்கு இரு அணி வீரர்களும் கடுமையாக போரடினர். இந்நிலையில் தன்னுடைய மாயஜாலத்தை காட்டுவதற்கு மெஸ்சி ஆயத்தமானார். அதே போல் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னர் மெஸ்ஸி அடித்த பீரி கிக் கோலால் அரங்கமே அதிர்ந்தது.

அதன் பின்னர் இரண்டாவது பாதியில் மெஸ்சியின் உதவி மூலம் இரண்டு கோல்களை அடித்து அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments