கனமழை காரணமாக சம்பியன்ஸ் லீக் சூப்பர் 8 போட்டிகள் ரத்து!

Report Print Raju Raju in கால்பந்து

இலங்கையில் நடைபெற்று வரும் மிகப்பெரிய கால்பந்து சுற்றுத் தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் கனமழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்தது.

பின்னர் இலங்கை தேசிய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அது நவம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி இன்று மற்றும் 20ஆம் திகதி நடைபெற இருந்த போட்டிகள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மறு திகதிகள் குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் நாளை மறுநாள் ராணுவப் படை மற்றும் கடற்படை அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments