அதற்காக நான் ஒன்றும் செத்துவிட மாட்டேன்: நெய்மர் ஆவேசம்

Report Print Jubilee Jubilee in கால்பந்து

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருது எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நான் ஒன்று செத்துவிட மாட்டேன் என்று பிரபல கால்பந்து வீரர் நெய்மர் கூறியுள்ளார்.

கால்பந்தில் சிறந்த விளங்கும் வீரருக்கு ஒவ்வொரு வருடமும் சிறந்த விருதான பாலன் டி ஆர் (தங்கபந்து) விருது வழங்கப்படும்.

கடந்த ஆண்டுக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து அணியின் மெஸ்ஸி வாங்கினார்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் கடைசி வரை பிரேசில் அணியின் தலைவரான நெய்மர் நீடித்தார். ஆனால் கிறிஸ்டியானோ ரோனால்டோ அந்த விருதை 4வது முறையாக கைப்பற்றினார்.

இது குறித்து நெய்மர் கூறுகையில், விருதுகளை விட எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன். பாலன் டி ஆர் விருது தான் எனது நோக்கம்.

ஆனால், அந்த விருது கிடைக்கா விட்டால் நான் செத்துவிட மாட்டேன். அந்த விருதுக்கான நான் விளையாடவில்லை. ஒரே ஒரு விரர் தான் விருதை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments