லா லிகாவின் அடுத்த சீசனில் VAR தொழில்நுட்பம்

Report Print Samaran Samaran in கால்பந்து

ஸ்பெயின் லா லிகா கால்பந்தாட்ட போட்டிகளின் அடுத்த சீசனில் Video Assistant Referee தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அந்நாட்டின் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

கால்பந்து போட்டிகளின் போது பெறப்படும் கோல்கள், சிவப்பு அட்டை, பெனால்ரி மற்றும் தவறான புரிதல்களால் ஏற்படும் தீர்ப்புக்களை மறுபரிசீலனை செய்வதற்கு Video Assistant Referees தொழில்நுட்பம் பயன்படும்.

இந்நிலையில் லா லிகா கால்பந்து தொடரின் அடுத்த சீசனில் பயன்படுத்தப்படும் என ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான ஜூவான் லூயிஷ் லாரியா அறிவித்துள்ளார்.

மேலும் லா லிகா தொடருக்கு முன்னதாக 70ற்கும் மேற்பட்ட போட்டிகளில் பரிசோதிக்கப்பட்ட பின்பே அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அடுத்தாண்டு இத்தாலி மற்றும் ஜேர்மனியில் நடைபெறும் தொடரிலும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...