கோலாகலமாக தொடங்கிய ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசன்: டிராவில் முடிந்த முதல் ஆட்டம்

Report Print Kabilan in கால்பந்து
106Shares
106Shares
ibctamil.com

கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசனான இந்த தொடரில், சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்றுள்ளன.

கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், இந்தி நடிகர் சல்மான்கான், மம்முட்டி, சச்சின் டெண்டுல்கர், கத்ரீனா கைஃப் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சல்மான்கானும், கத்ரீனா கைஃப்பும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

அதன் பின்னர், மம்முட்டி கால்பந்தினை போட்டி ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானியிடம் வழங்க போட்டி தொடங்கியது.

இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் கோல் ஏதும் விழவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல் தொடரின் முதல் போட்டி எந்த அணிக்கும் வெற்றி இல்லாமல் டிராவில் முடிவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்