இமாலய மைல்கல்லை எட்டிய மெஸ்ஸி

Report Print Kabilan in கால்பந்து
193Shares
193Shares
lankasrimarket.com

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, 600 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா கிளப் அணிக்காக லயோனல் மெஸ்ஸி விளையாடி வருகிறார். இந்நிலையில், பார்சிலோனா அணி தனது 27வது லீக் ஆட்டத்தில் அத்லெடிகோ மாட்ரிட் அணியுடன் நேற்று மோதியது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் 26வது நிமிடத்தில், தனக்கு கிடைத்த Free Kick வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மெஸ்ஸி அபாரமாக கோல் அடித்தார்.

இந்த கோலே வெற்றிக்கான கோல் ஆக அமைந்ததால், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தனது வாழ்நாளில் மெஸ்ஸி ’600 கோல்கள்’ அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதில் கிளப் அணிகளுக்காக 539 கோல்களும், அர்ஜெண்டினாவுக்காக 61 கோல்களும் மெஸ்ஸி அடித்துள்ளார். மேலும், பார்சிலோனா அணிக்காக லா லிகா தொடரில் 8 முறை சாம்பியன் பட்டம், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 4 முறை மற்றும் ஸ்பானிஷ் கிண்ணத் தொடர்களில் 5 முறை கிண்ணம் ஆகியவற்றையும் மெஸ்ஸி வென்றுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்