உலகக் கிண்ண கால்பந்து தொடரில் கூடுதல் அணிகள்: ஐரோப்பா எதிர்ப்பு

Report Print Kabilan in கால்பந்து

கத்தாரில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகளை பங்கேற்க வைக்கும் பிஃபாவின் திட்டத்திற்கு, ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வருகிற ஜூன் மாதம் 32 அணிகள் பங்கேற்கும், உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது.

ஆனால், இந்த தொடரில் 48 அணிகளை விளையாட வைக்க பிஃபா திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 16 அணிகள் பங்கேற்பதில் ஐரோப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, கத்தார் நாட்டில் கடும் வெயில் இருக்கும் என்பதால், உலகக் கிண்ண தொடர் போட்டிகள் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், கூடுதலாக 16 அணிகள் சேர்க்கப்பட்டால் போட்டிகள் அதிகரிக்கும். அத்துடன் நான்கு நாட்கள் கூடுதலாக விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால், ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில், இந்த லீக் தொடர் தற்போது பாதிநிலையை எட்டியுள்ளது.

எனவே, உலகக் கிண்ண தொடரால் லீக் தொடர்களை தள்ளிப் போட முடியாது என்று ஐரோப்பிய லீக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கத்தாரில் உலகக் கிண்ண தொடருக்காக பிரம்மாண்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Osama Faisal/AP

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்