100வது போட்டியில் விளையாடும் இரண்டாவது இந்திய கால்பந்து அணி வீரர்

Report Print Kabilan in கால்பந்து
55Shares
55Shares
lankasrimarket.com

இந்திய கால்பந்து அணித்தலைவர் சுனில் சேத்ரி, இன்று தனது 100வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட உள்ளார்.

இந்தியாவில் 4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் துவக்க ஆட்டத்தில் இந்திய அணி, 5-0 என்ற கணக்கில் சீன தைபே அணியை அபாரமாக வீழ்த்தியது. இந்நிலையில், இந்திய அணி இன்று 2வது லீக் போட்டியில் கென்யாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டி இந்திய அணியின் தலைவர் சுனில் சேத்ரிக்கு 100வது சர்வதேச போட்டியாகும். இதுகுறித்து சுனில் சேத்ரி(33) கூறுகையில்,

‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார்.

இந்த மைல்கல்லை எட்டும் 2வது இந்தியர் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பாய்சுங் பூட்டியா 100 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்