300 கோடி மக்கள் காத்திருக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடர்: இன்று பிரம்மாண்ட துவக்கம்

Report Print Kabilan in கால்பந்து
263Shares
263Shares
ibctamil.com

உலகின் மிகப் பெரிய விளையாட்டு தொடரான பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் இன்று துவங்க உள்ள நிலையில், உலகம் முழுவதும் 300 கோடி பேர் இதனை பார்த்து ரசிக்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

21வது பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர் ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. இந்த தொடரில் 32 நாடுகள் 64 ஆட்டங்களில் விளையாட உள்ளன.

லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூன் 28 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாக்-அவுட் ஆட்டங்கள் ஜூன் 30-யிலும், கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 10 மற்றும் 11ஆம் திகதிகளிலும், இறுதி ஆட்டம் ஜூலை 15ஆம் திகதியும் நடைபெறும்.

  • இதுவரை நடந்துள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில், இதுவரை 8 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. பிபா கால்பந்து கூட்டமைப்பில் 211 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இதுவரை 77 நாடுகள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பங்கேற்றுள்ளன.
  • அவற்றில் 12 நாடுகள் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன. ஆனால், 8 நாடுகள் மட்டுமே உலகக் கிண்ணத்தை மாறி மாறி கைப்பற்றியுள்ளன.
  • பிரேசில் நாடு, இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ஒரே நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் ஐந்து முறை உலக கிண்ணத்தை வென்று, அதிக முறை கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்ற அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.
  • பிரேசிலை அடுத்து, நடப்பு சாம்பியனான ஜேர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • இந்த உலகக் கிண்ண தொடரில் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விடயம் இத்தாலி அணி இடம்பெறாதது தான். நான்கு முறை சாம்பியனான இத்தாலி, இந்த உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறவில்லை.
  • இந்த தொடரை, உலகம் முழுவதும் 196 தொலைக்காட்சி சேனல்களில், 212 நாடுகளில் ஒளிபரப்பப்பட உள்ளது. உலகமெங்கும் உள்ள சுமார் 300 கோடி பேர் இந்த தொடரை தொலைக்காட்சியில் கண்டு ரசிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இன்று துவங்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோத உள்ளன. அதற்கு முன்னதாக பிரம்மாண்ட முறையில் துவக்க விழா நடைபெற உள்ளது.
FIFA

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்