அது மட்டும் வேண்டாமே? ஜனாதிபதி புடின் சொல்வது என்ன

Report Print Fathima Fathima in கால்பந்து

ரஷ்யாவுக்கு வருகை தரும் ரசிகர்களுடன், ரஷ்ய பெண்கள் உறவு வைத்துக் கொள்ளலாம் என ஜனாதிபதி புடினின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் களைகட்டியுள்ளன, கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஷ்யாவை நோக்கி படையெடுப்பார்கள்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு வரும் ரசிகர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என ரஷ்ய கீழவை பெண் எம்பி-யும், கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்டன்யாவா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி முடிந்த பின்னர் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, லத்வியா இன கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தது.

இவர்களை பெரும்பாலான தாய்மார்கள் கைவிட்டதால் பாதிப்புக்குள்ளாகினர், சிங்கிள் மதர்கள் உருவாகிறார்கள்.

கலப்பின குழந்தைள் வேண்டாம், ரஷ்ய இன குழந்தைகள் பிறப்பதே நல்லது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சாளர், உலகிலேயே நம் நாட்டு பெண்கள் அழகானவர்கள், தங்களது முடிவை எடுக்க ரஷ்ய பெண்களுக்கு அனுமதி உண்டு.

ரசிகர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், அது பெண்களின் விருப்பதை பொறுத்தது என தெரிவித்துள்ளார்.

பெண் எம்பியின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers