சாலாஹின் எகிப்தை காலி செய்த ரஷ்யா: இரண்டாவது சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு

Report Print Arbin Arbin in கால்பந்து

ஃபிபா உலக கிண்ணம் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று துவங்கியது. இதில் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா, முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த எகிப்தை சந்தித்தது.

பிரபல வீரர் சாலாஹின் எகிப்தை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்தது ரஷ்யா.

1934 ஆம் ஆண்டுக்குப் பிறகு 1990ல் நடந்த உலக கிண்ணம் தொடரில் எகிப்து பங்கேற்றது. ஆனால், பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை.

தற்போது மொகமது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் உலக கிண்ணம் தொடருக்குள் நுழைந்துள்ளது.

ஏற்கனவே ஒரு வெற்றியைப் பெற்றிருந்த ரஷ்யா எகிப்துடன் இன்று விளையாடியது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மொகம்மது சாலாஹ் களமிறங்கினார்.

இந்த ஆட்டத்தில் ரஷ்யா மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்தது. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் அஹ்மது பாதி, 59வது நிமிடத்தில் செர்ரிஷேவ், 62வது நிமிடத்தில் டிசூபா கோலடிக்க 3-0 என ரஷ்யா முன்னிலை பெற்றது.

நட்சத்திர வீரர் சாலாஹ் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 73வது நிமிடத்தில் எகிப்துக்காக ஒரு கோலடித்தார்.

சமபலத்துடன் இந்த ஆட்டம் நடந்ததே, எகிப்து அணிக்கு மிகப் பெரிய தோல்வியாகும். ரஷ்யாவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் எகிப்து திணறியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ரஷ்யா பெற்றது.

புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை ரஷ்யா பிரகாசமாக்கி கொண்டுள்ளது.

அதே நேரத்தில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள எகிப்து பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலையில் உள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...