அர்ஜெண்டினா அணி வீரர்கள் பெண்கள் போல் தரையில் விழுந்து அழுதார்கள்: மோசமாக கிண்டலடித்த குரேஷிய வீரர்

Report Print Kabilan in கால்பந்து

உலகக் கிண்ண கால்பந்து தொடரில், குரோஷியா அணிக்கு எதிரான அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தபோது, அந்த அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழுததை குரோஷிய வீரர் ஒருவர் மோசமாக கிண்டல் செய்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில், அர்ஜெண்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.

இதனால் அர்ஜெண்டினா அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதன் பின்னர், அந்த அணியின் பயிற்சியாளர் ஜோர்ஹே சம்போலி, அர்ஜெண்டினா அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் குரோஷிய வீரர் Sime Vrsaljko கூறுகையில்,

‘அவர் இந்தப் போட்டியைத்தான் பார்த்தாரா அல்லது வேறு போட்டியையா என்று தெரியவில்லை. அர்ஜெண்டினா வீரர்கள் தரையில் விழுந்து பெண்கள் போல் அழுததைத்தான் நான் பார்த்தேன்.

அவர்களை விட நாங்கள் தான் உறுதியுடனும், சிறப்புடனும் ஆடினோம். எங்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. எனவே நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்தினோம்.

அர்ஜெண்டினா அடுத்த போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியேயாக வேண்டும். அதாவது அவர்கள் அடுத்தச் சுற்றுக்கு போக வேண்டுமென்றால், போவார்களா?’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers