கால்பந்து வீரர்களின் வாரிசை சுமங்கள்! சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்

Report Print Fathima Fathima in கால்பந்து

ரஷ்யாவில் விளையாடும் கால்பந்தாட்ட வீரர்களின் வாரிசுகளை சுமந்தால் பரிசு வழங்கப்படும் என துரித உணவகம் வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கால்பந்தாட்ட போட்டிகள் களைகட்டிய நிலையில், லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டுகளிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் துரித உணவகம் ஒன்று அந்நாட்டு பெண்களுக்கு வினோத பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி, உலக கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் மூலம் ரஷ்ய பெண்கள் கர்ப்பமானால் $47,000 ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதன்மூலம் எதிர்காலத்தில் ரஷ்ய கால்பந்து அணிக்கு சிறந்த வீரர்களை உருவாக்கலாம் என்றும் விளக்கம் அளித்தது.

இந்த விளம்பரங்கள் இணையதளங்களில் வைரலாக, கடும் எதிர்ப்புகள் எழுந்தது, இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட உணவகம் விளம்பரத்தையும் நீக்கியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers