உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் தமிழக சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்

Report Print Santhan in கால்பந்து

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பால்கேர்லாக சென்றுள்ளார்.

ரஷ்யாவின் செயீட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் லீக் சுற்று நடைபெற்று வருகிறது.

இந்த லீக் சுற்றின் கோஸ்டாரிகா அணியும் பிரேசில் அணியும் மோதிய ஆட்டத்தின் போது அதிகாரபூர்வ பந்தை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி நத்தானியா ஜான் முன்நின்று கால்பந்தை எடுத்து சென்றார்.

FIFA ஸ்பான்சர் KIA ஏற்பாடு செய்த ஒரு போட்டியில் நத்தானியா ஜான் வெற்றி பெற்றார். இதன் காரணமாகவே சிறுமிக்கு உலகக்கிண்ண போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இவரைப் போன்று கர்நாடகாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ரிஷி தேஜும் வெற்று பெற்றதால், அவரும் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டதால், பார்ள் கேர்ளால நத்தானியா ஜானும், பார்ள் பாயாக ரிஷி தேஜும் அங்கு சென்றுள்ளனர்.

இவர்களை கெளரவபடுத்தும் விதமாக போட்டிக்கான அதிகாரபூர்வ பந்தை எடுத்து செல்ல சிறுமி நத்தானியா ஜானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...