கொலை வெறியோடு விளையாடிய கொலம்பியா: கேட்பாஸ் வாங்கிய போலந்து

Report Print Arbin Arbin in கால்பந்து

கொலம்பியா மற்றும் போலந்து அணிகள் மோதிய இன்றைய கடைசி ஆட்டத்தில் கொலம்பியா 3-0 என அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.

முக்கியமான பெரிய அணிகள் சொதப்பி வரும் நிலையில் அறிமுக மற்றும் குட்டி அணிகள் மாஸ் காட்டி விளையாடி வருகிறது.

எச் பிரிவில் நடந்த கொலம்பியா மற்றும் போலந்துக்கு எதிரான ஆட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் எச் பிரிவில் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. தொடக்கத்திலேயே தோல்வியை தழுவி இரு அணிகளும் அதிர்ச்சி அளித்தன.

கொலம்பியா அணியில் உள்ள வீரர்கள் தனித் தனியாக செய்யும் தவறுகள் காரணமாக, அந்த அணி தோல்வியை தழுவியது.

அதே சமயத்தில், போலந்து அணி, சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவு சுற்றுடன் வெளியேறியது. அடுத்த சுற்றுக்கு முன்னேற 4 புள்ளிகளுடன் உள்ள ஜப்பான், செனகல் மற்றும் 3 புள்ளிகளுடன் உள்ள கொலம்பியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இன்று நடந்த ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் எர்ரி மினா கோலடிக்க கொலம்பியா 1-0 என முன்னிலை பெற்றது.

பால்கோ 70வது நிமிடத்தில் கோலடிக்க கொலம்பியா 2-0 என முன்னிலையை அதிகரித்தது. 75வது நிமிடத்தில் ஜூவான் குவாட்ராடோ அணியின் மூன்றாவது கோலை அடித்து அணியின் வெற்றிக்கு உறுதி சேர்த்தார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்