சூறாவளியாய் சுழன்றடித்த தென்கொரியா: வெளியேறியது நடப்பு சாம்பியன் ஜேர்மனி!

Report Print Arbin Arbin in கால்பந்து
910Shares
910Shares
lankasrimarket.com

ஃபிபா உலகக் கிண்ணம் தொடரில் இதுவரை நடந்துள்ள பல அதிர்ச்சிகளில் உச்சகட்டமாக, நடப்பு சாம்பியன் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது.

தென்கொரியவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சொதப்பலாக விளையாடி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்த்துகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜேர்மனி, தென் கொரியாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதின.

எப் பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்திலேயே ஜேர்மனிக்கு அதிர்ச்சி கிடைத்தது. மெக்சிகோ 1-0 என ஜேர்மனியை வென்றது. ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது.

பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் மெக்சிகோ 2-1 என தென்கொரியாவை வென்றது. ஜேர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது.

மெக்சிகோ 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஜேர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

இரண்டு தோல்விகளை சந்தித்த தென்கொரியா பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது. இந்த நிலையில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற, தென்கொரியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜேர்மனி இன்று களமிறங்கியது.

நடப்பு சாம்பியனான ஜேர்மனி, இதுவரை நான்கு முறை உலகக் கிண்ணம் வென்றுள்ளது. ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று, அதிக முறை வென்ற பிரேசில் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் இருந்தது.

மேலும் தொடர்ந்து 2வது முறையாக வெல்லும் இலக்குடனும் இருந்தது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் அதிக கோல்களுடன் வென்றாக வேண்டிய கட்டாய நிலையில் ஜேர்மனி இருந்தது.

எப் பிரிவில் இந்த ஆட்டம் நடந்த அதே நேரத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதின. அந்த ஆட்டத்தின் முடிவும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் ஜேர்மனி இருந்தது.

ஆட்டத்தின் 74 சதவீதம் பந்து ஜேர்மனியிடம் இருந்தது. ஆனால், மிகச் சிறந்த தடுப்பாட்டத்தின் மூலம் கோலடிக்கும் வாய்ப்புகளை தென்கொரியா முறியடித்தது.

கடைசியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கிம் யாங்க் குவான், சன் ஹியூங் மின் தொடர்ந்து இரண்டு கோல்களை அடிக்க தென்கொரியா 2-0 என ஜேர்மனியை பேக் செய்தது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஜேர்மனி, முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

1938 ஆம் ஆண்டில் இருந்தே ஜேர்மனி முதல் சுற்றில் வெளியேறுவது இதுவே முதன் முறையாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்