அரையிறுதிக்கு இந்த அணி முன்னேறும்: டால்பின்களின் தெரிவு என்ன?

Report Print Kavitha in கால்பந்து

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடரில் அரையிறுதி போட்டிக்கு ரஷ்யா முன்னேறும் என டால்பின்கள் ஆருடம் தெரிவித்துள்ளன.

ரஷ்யா- குரேஷியா அணிகள் இடையே நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என டால்பின்களை வைத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இரண்டு அணிகளின் கொடிகள் பொருத்தப்பட்ட வட்டுகள் நீச்சல் குளத்தில் வீசப்பட்டன.

அந்த வட்டுகளை எடுத்து வருவதற்கான பயிற்சிகள் 2 டால்பின்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தன.

முதலில் வரும் டால்பின் எந்த அணியின் கொடியைக் கொண்ட வட்டை எடுத்து வருகிறதோ, அந்த அணி வெற்றி பெறும் என முடிவு செய்யப்பட்டது.

4 முறை நடத்தப்பட்ட கணிப்பில் ரஷ்யாவுக்கு சாதகமாக 3 முறையும் குரோஷியாவுக்கு சாதகமாக ஒரு முறையும் முடிவுகள் வந்தன, எனவே ரஷ்யா தான் முன்னேறும் என கணிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்