கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்ட பிரேசில்! அரையிறுதிக்குள் நுழைந்து கெத்து காட்டிய பெல்ஜியம்

Report Print Santhan in கால்பந்து

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இன்றைய நாக் அவுட் சுற்றின் இரண்டாவது போட்டியில் நட்சத்திர வீரரான நெய்மர் இருக்கும் பிரேசில் அணியும், பெல்ஜியம் அணியும் மோதின.

முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டதால், இந்த போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்று பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.

அதன் ஆட்டத்தின் துவக்கம் முதல் இருந்தே ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெல்ஜியம் அணிக்கு அந்தணி வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா அற்புதமாக கோல் அடித்து தன்னுடைய அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே தன்னுடைய பங்குக்கு ஒரு கோல் அடிக்க அந்தணி 2-0 என்று முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் பெல்ஜியம் அணி எவ்வளவு தான் கோல் போட முயற்சித்தும் அந்தணியால் அடிக்க முடியாத காரணத்தினால் முதல் பாதியில் பெல்ஜியம் அணியே 2-0 என்று முன்னிலை பெற்றது.

இதையடுத்து இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர்.

இருப்பினும் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.

ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதன் மூலம் பிரேசில் அணியின் உலக்கிண்ணம் கனவும் தகர்ந்தது. பிரேசில் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் அந்தணி தனக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை வீணடித்ததே காரணம்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்