2018 உலகக் கிண்ண தொடரில் ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கம்

Report Print Kabilan in கால்பந்து
252Shares
252Shares
lankasrimarket.com

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஐரோப்பாவைச் சேர்ந்த 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் பெல்ஜியம், பிரான்ஸ், குரோஷியா, இங்கிலாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய அணிகள் நுழைந்துள்ளன. இது கடந்த 1934, 1966, 1982, 2006 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள 5வது நிகழ்வாகும்.

உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை ஐரோப்பா, தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகளே மாறி மாறி கிண்ணத்தை கைப்பற்றி வந்துள்ளன. அவற்றில் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகள் 11 முறையும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகள் 9 முறையும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.

இம்முறை தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், உருகுவே, அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு ஆகிய அணிகள் காலிறுதி வரை முன்னேறின. எனினும், ஒரு அணியால் கூட அரையிறுதியை எட்ட முடியவில்லை.

குறிப்பாக சாம்பியன் அணியும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியுமான பிரேசிலும் வெளியேறியுள்ளது. இதன் மூலம், கடந்த 1958ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் நடத்தப்படும் உலகக் கிண்ண போட்டிகளில் தென் அமெரிக்க அணி ஒன்று, கிண்ணத்தை வென்றதில்லை எனும் சோகம் தொடருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்