உலகக்கோப்பை காலிறுதி வெற்றிக்கு பின் இங்கிலாந்து அணித்தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in கால்பந்து
474Shares
474Shares
lankasrimarket.com

இன்னும் மிகப் பெரிய போட்டி காத்திருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சுவீடனை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் குரோசியாவை எதிர்கொள்கிறது.

குரோசியாவை வீழ்த்தினால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அல்லது பிரான்ஸ் அணியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

இது குறித்து ஹரி கேன் கூறுகையில், அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது அனேகமாக மூழ்காது. இன்னும் பெரிய போட்டி காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்