2018 உலகக் கிண்ண கால்பந்து: அதிர்ச்சிகரமான முடிவுகள் மற்றும் கடைசி கட்ட கோல்கள்

Report Print Kabilan in கால்பந்து
404Shares
404Shares
lankasrimarket.com

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட கடைசி கட்ட கோல்கள் மற்றும் அதிர்ச்சிகரமான முடிவுகள் குறித்து காண்போம்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில், இதுவரை நடந்த ஆட்டங்களில் பல அதிர்ச்சி முடிவுகள் அரங்கேறின.

கணிக்க முடியாத ஆட்டங்கள்
 • கால்பந்து உலகில் சாம்பியன் அணிகளான ஜேர்மனி, அர்ஜெண்டினா, பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகள் ரஷ்ய உலகக் கிண்ண தொடரில் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டன.
 • மேலும் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளும் அடுத்தடுத்த இடங்களில் எதிர்பார்க்கப்பட்டன. இந்நிலையில் நடப்பு சாம்பியனான ஜேர்மனி அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
 • இது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதனைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் அணி ரஷியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
 • அதே போல் முதல் சுற்றில் குரோஷியாவிடம் படுதோல்வியடைந்த அர்ஜெண்டினா, நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
 • ரொனால்டோவினால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்ச்சுக்கல், முதல் சுற்றில் ஈரானிடம் டிரா கண்டது. அதன் பின்னர் உருகுவேவுடன் அடுத்த சுற்றில் தோற்று வெளியேறியது.
 • ஆனால், கிண்ணத்தை வென்று 28 ஆண்டுகளாகியிருந்த இங்கிலாந்து அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றது.
கடைசி கட்டத்தில் போடப்பட்ட கோல்கள்
 • 2018 உலகக் கிண்ண தொடரில் இதுவரை நடந்த 56 ஆட்டங்களில், 146 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 கோல்கள் 90வது நிமிடத்திலும், கூடுதல் நேரத்திலும் அடிக்கப்பட்டுள்ளன.
 • அதில் 9 கோல்கள் வெற்றிக்கான கோல்களாகும். எகிப்து அணியின் சலேம் அல் தாசரி, அஸிஸ் புகாதூஸ் (ஈரான்), ஜேர்மனியின் டோனி குரூஸ், இங்கிலாந்தின் ஹாரி கேன் ஆகியோர் வெற்றிக்கான கோல்களை அடித்தனர்.
 • சில கோல்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றின. ஜப்பானுக்கு எதிராக நாசர் சாடியின் கோல் ஜப்பானுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
 • இந்த தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும், சிறந்த அணி என ரசிகர்கள் கூறியவற்றை பொய்யாக்கின.
புதிய தொழில்நுட்பம்
 • இந்த உலகக் கிண்ண தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட வார் தொழில்நுட்பத்திற்கு பின், 28 பெனால்டி வாய்ப்புகள் தரப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 1990, 1998 மற்றும் 2002 உலகக் கிண்ண தொடர்களில் அதிகபட்சமாக 18 முறை பெனால்டி கிக் தரப்பட்டது.
 • வார் முறையானது பல்வேறு ஆட்டங்களின் முடிவையே மாற்றிவிட்டது. பிரேஸில்-கோஸ்டா ரிகா ஆட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின்படி சரிபார்க்கப்பட்டு பெனால்டி தரப்பட்டது.
 • இதுவரை நடந்த உலகக் கிண்ண தொடர்களிலேயே ரஷ்யாவில் நடக்கும் தொடரே சிறந்ததாக கருதப்படுகிறது.
Stephen Lioy/Alamy/Hemis.fr

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்