ரசிகர்களுக்கு ரொனால்டோவின் உருக்கமான கடிதம்

Report Print Deepthi Deepthi in கால்பந்து
316Shares
316Shares
lankasrimarket.com

கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரொனால்டோ இத்தாலியன் கிளப் அணியான யுவெண்டஸ் அணிக்காக 112 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

33 வயதான ரொனால்டோ தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுவார் என நினைத்திருந்த வேளையில், அவரின் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்க மறுத்தனர்.

இந்நிலையில், ரொனால்டோ ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய 9 வருடங்களும் பொற்காலம். இங்கே கால்பந்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினேன்.

அதேநேரத்தில் எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான காலகட்டம் வந்து விட்டதாக நம்புகிறேன். அதனால்தான் இந்த மாற்றம். ரியல் மாட்ரிட் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றைத் தான். எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்.

களத்திலும் ஓய்வு அறையிலும் எனக்குக் கிடைத்த சிறந்த சக வீரர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்