இது கால்பந்து விளையாட்டுக்கே அவமானம்: பிரான்ஸ் அணியை கடுமையாக விமர்சித்த வீரர்

Report Print Kabilan in கால்பந்து
1222Shares
1222Shares
lankasrimarket.com

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில், விளையாடாமல் தற்காப்பில் மட்டுமே ஈடுபட்ட பிரான்ஸ் அணியிடம் தோற்றோம் என பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆடிய விதத்தை, பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் கோர்டோயிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கடுப்பேற்றக்கூடிய வகையில் ஆட்டம் அமைந்தது. பிரான்ஸ் அணி விளையாடவே இல்லை. கோல் Post-யில் இருந்து 40 மீற்றர் வரை, 11 வீரர்களையும் நிறுத்தி தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

எங்களை விடவும் சிறந்த அணியிடம் நாங்கள் தோற்கவில்லை. ஒன்றுமே விளையாடாமல் தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்திய அணியிடம் தோற்றோம் என்பது கடுப்பேற்றுகிறது.

உருகுவேவிற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் Free-kick மூலமாகவும், கோல் கீப்பரின் தவறாலும் அவர்கள் வென்றார்கள்.

இன்று Corner மூலமாக கோலடித்து வென்றார்கள். பெல்ஜியம் வெற்றி பெறாதது, கால்பந்து விளையாட்டிற்கு அவமானகரமானது’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்