இங்கிலாந்து ரசிகர்கர்களின் கனவை கலைத்த குரேஷியா: பரபரப்பில் முடிந்த கடைசி நிமிடங்கள்

Report Print Santhan in கால்பந்து
890Shares
890Shares
lankasrimarket.com

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.

ரஷ்யாவில் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் அரையிறுதிப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து- குரேஷியா அணிகள் மோதின.

28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

இளவரசர் உட்பட பலரும் எதிர்பார்த்த போது இன்று நடைபெற்றது.

அதன் படி ஆட்டம் துவங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடிக்க இங்கிலாந்து வீரர்கள் துள்ளி குதித்தனர்.

அதுமட்டுமின்றி போட்டி துவங்கிய சிறிது நிமிடத்திலே கோல் அடிக்கப்பட்டதால், மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது.

இதையடுத்து முதல் பாதியில் குரேஷியா அணி எந்த கோலும் அடிக்காத காரணத்தினால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

அதன் பின் இரண்டாவது பாதி துவங்கியவுடனே குரேஷியா வீரர்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் குரேஷியா வீரர்களிடம் பந்து மாறி, மாறி பறந்தது.

குரேஷியா வீரர்களும் கோல் அடிக்க போராடினார். அதன் பயனாக 68-வது நிமிடத்தில் குரேஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்காத காரணத்தினால் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் முடிந்தன.

சமநிலையில் முடிந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவதாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் அற்புதமாக கோல் அடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதன் பின் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக போராடிய போது, கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கனவை உடைத்த மாரியோ மாண்ட்சிக்கை குரேஷியா நாட்டு ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்