உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியோடு இங்கிலாந்து வெளியேறவில்லை! இன்னும் ஒரு முக்கியமான போட்டி காத்திருக்கு தெரியுமா?

Report Print Santhan in கால்பந்து
871Shares
871Shares
lankasrimarket.com

குரோசியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போதும், இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்காக பெல்ஜியம் அணியுடன் மோதவுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இன்றைய குரோசியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழந்த போதும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியை பிரித்தானியா இளவரசர் பாராட்டினார்.

இந்நிலையில் இந்த உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி காத்திருக்கிறது.

மூன்றாம் இடத்திற்கான போட்டி, அப்போட்டியில் இங்கிலாந்து அணி, பெல்ஜியம் அணியை வரும் சனிக்கிழமை சந்திக்கிறது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடம் பிடிக்கும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்