13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன்...19 வயதில் உலகக்கிண்ண ஹீரோவாக வலம் வரும் பிரான்ஸ் வீரர்

Report Print Deepthi Deepthi in கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய பிரன்ஸ் அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பிரான்ஸ் அணியில் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் நாயகன் எம்பாப்வே இளம் வீரருக்கான விருதினை பெற்றார். 19 வயதான இவர், உலகின் விலையுயர்ந்த வீரர்களின் பட்டியலில் உள்ளார். இந்த ஆண்டு 135 மில்லியன் யூரோவுக்கு Monaco அணியில் இருந்து Paris Saint-Germain அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இளம் வயதிலேயே கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், தனது 13 வயதில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் தீவிர ரசிகன் ஆவார்.

கால்பந்து போட்டியில் மிகவும் சாதிக்க வேண்டும் என்பதை ரொனால்டோவின் வழியாக கற்றுக்கொண்டார். 13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகனாக இருந்த இவர் 19 வயதில் உலகக்கிண்ண ஹீ ரோவாக வலம் வருகிறார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers