உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் நேர்மையாக விளையாடிய அணி எது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் நேர்மையாக விளையாடும் அணிக்கு இறுதியில் Fair Play விருது வழங்கப்படும்.

இரண்டாம் சுற்றுக்கு தகுதிப் பெற்ற அணிகளில் அதாவது மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்படாத அல்லது குறைவாக காண்பிக்கப்பட்ட அணிக்கு இந்த Fair Play விருது கொடுக்கப்படும்.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி Fair Play விருது வென்றுள்ளது. இந்த உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றோடு வெளியேறியது.

மிகவும் மரியாதையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்பெயின் அணிக்கு Fair Play விருது கொடுக்கப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதை பிரேசில் அணி அதிக பட்சமாக நான்கு முறை வென்றுள்ளது.

எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம் பெற்ற உலகக்கோப்பை போட்டியில் கொலம்பியா அணி முதன்முறையாக இவ்விருதை வென்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்