இங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர்! இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்

Report Print Santhan in கால்பந்து

உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பின், நான் ஒரு சிறந்த வீரர் என்று பெருமையாக கூறிய குரேஷியா வீரர் தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் குரோசியா அணிகள் மோதின.

இப்போட்டியில் குரேஷியா அணி கடைசி நிமிடத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

லீக் சுற்றிலிருந்தே, பலம் வாய்ந்த அணிகளுக்கு எல்லாம் அதிர்ச்சி கொடுத்த குரேஷிசியா அணியை பலரும் பாராட்டினர்.

அந்த நேரத்தில் குரேஷியா அணியின் டிபன்சரான Dejan Lovren, Champions League போட்டியில் தான் விளையாடி Liverpool அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது, அதே போன்று தற்போது தன்னுடைய நாட்டு அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுவே போதும் என்னைப் பற்றி அறிவில்லாத சிலர் பேசுகின்றனர். உலகில் உள்ள சிறந்த டிபண்டர்களில் நானும் ஒருவன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டென்மார்க் அணியின் கோல் கீப்பரான Kasper Schmeichel பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசுகையில், இறுதிப் போட்டியில் குரோசியா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் டிபண்டர்கள் சரியாக விளையாடதது தான், அதாவது குரோசியா அணியின் டிபண்டர்களான Domagoj Vida மற்றும் Dejan Lovren ஆகியோர் தான், அன்றைய தினத்தில் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே கூறுவேன்.

இவர்கள் சரியாக விளையாடியிருந்தால் பிரான்ஸ் அணி 4 கோல் போட்டிருக்காதே, இவர்களின் சொதப்பலே முக்கிய காரணம் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் குரேஷியா அணியின் டிபண்டரான Dejan Lovren கடைசி இரண்டு மாதங்களில் இரண்டு இறுதிப் போட்டிகள் விளையாடியுள்ளார். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலுமே அவர் விளையாடிய அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...