257 மில்லியன் டொலரில் கட்டப்பட்ட உலகக் கிண்ண மைதானம்: ஒரே நாள் பெய்த மழையால் பலத்த சேதம்

Report Print Kabilan in கால்பந்து

ரஷ்யாவில் கட்டப்பட்ட உலகக் கிண்ண கால்பந்து மைதானம், ஒரே நாள் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ளது.

ரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக பல மைதானங்கள் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது சுமார் 257 மில்லியன் டொலர்களில் கட்டப்பட்ட வோல்கோகிராட் மைதானம்.

இந்த மைதானத்தில் 8 ஆட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இறுதிப் போட்டி நடந்த அன்று கனமழை பெய்தது. இந்த மழையால் மைதானத்துக்கு அருகே அமைந்துள்ள ஏரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளத்தினால் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்ள கட்டுமானம் அரித்து செல்லப்பட்டது. இதனால், மைதானத்தில் வெளிப்புறத்தில் பல மீட்டர் தொலைவிற்கு பெரிய பள்ளம் விழுந்தது. இது அங்குள்ள மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

பல கோடி மதிப்பில் உருவான மைதானம் ஒரு நாள் மழைக்கு தாங்காததும், தொடருக்காக கட்டப்பட்டுள்ள மைதானங்களை ரஷ்யா இனி எதற்காக பயன்படுத்தப் போகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers