அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் வடக்கின் கில்லாடி வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
அரியாலை கால்பந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற காலிறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழக அணி மோதியது.
நிர்ண யிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா கோலொன்றைப் பதிவுசெய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முடிவில் 3:1 என்ற கோல் கணக்கில் ஊரெழு றோயல் அணி வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது.
ஆட்டநாயகனாக ஊரெழு றோயல் அணியின் சன்சயன் தெரிவானர்.