கடைசி நேர பெனால்டி கைகொடுக்க இறுதிப்போட்டிக்குள் நுழைந்த றேஞ்சர்ஸ் அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 5 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, வடமாகாண ரீதியில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில் 24 கழகங்கள் பங்குபற்றுவதுடன், போட்டிகள் விலகல் முறையில் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சுற்றுப்போட்டியின் அரையிறுதியாட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன.

20 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி மோதியது. போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் தலா 1 கோலைப் பெற்றிருந்தன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது.

அதில் றேஞ்சர்ஸ் அணி, 04:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers