ரி.பி பத்மநாதன் வெற்றிக்கிண்ணத் தொடரில் இறுதிக்குள் நுளைந்த ஊரெழு றோயல், பாடும்மீன் அணிகள்!

Report Print Samaran Samaran in கால்பந்து
59Shares

ரி.பி பத்மநாதன் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டிக்கு பலம்பொருந்திய அணிகளாக வர்ணிக்கப்படும் குருநகர் பாடும்மீன் மற்றும் ஊரெழு றோயல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கிறாஸ்கோப்பர்ஸ் அணியின் முன்னாள் கால்ப்பந்தாட்ட பயிற்றுநர் ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்தமாக யாழ்ப்பாண லீக் அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 27 ஆம் திகதி முதல் அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக, வலிகாமம் லீக்கின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டு வந்து, சில குழப்பங்களால் இம்முறை யாழ்ப்பாண லீக்கின் ஒழுங்கமைப்பில், ராஜகாந்தன், தர்மகுலசிங்கம் மற்றும் மோகன்ராம் ஆகியோரின் அனுசரணையில் நடைபெறுகின்றன.

நொக்கவுட் முறையில் நடைபெறும் இந்தச் சுற்றுப்போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்குபற்றின. சுற்றுப்போட்டியின் காலிறுதி மற்றும் அரையிறுதியாட்டங்கள் நேற்று முந்தினம் நடைபெற்றது.

காலிறுதியாட்டங்கள் முதலாவது காலிறுதியாட்டங்களில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதியது. இதில் ஞானமுருகன் அணி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

இரண்டாவது காலிறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து அரியாலை ஐக்கியம் அணி மோதியது. இதில் ஊரெழு றோயல் அணி, 03:00 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வென்றது.

மூன்றாவது காலிறுதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து நாவற்குழி அன்னை அணி மோதியது. இதில் குருநகர் பாடும்மீன் அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

நான்காவது காலிறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியை எதிர்த்து பாசையூர் சென்.அன்ரனீஸ் அணி மோதியது.

போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து நடைபெற்ற பெனால்ட்டி உதையில், சென்.நீக்கிலஸ் அணி, 05:04 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

அரையிறுதியாட்டங்கள் நேற்று மாலை இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதியது.

வழங்கப்பட்ட போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தன. தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடைபெற்ற பெனால்ட்டி உதையில் ஊரெழு றோயல் அணி, 04:03 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணி மோதியது. இதில் பாடும்மீன் அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்