ரொனால்டோ அடித்த பந்தால் மைதானத்தில் சுருண்டு விழுந்த சக அணி வீரர்! அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in கால்பந்து

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ உதைத்த பந்து, முகத்தை தாக்கியதில் சக அணி வீரர் சுருண்டு விழுந்த சம்பவம் நடந்தது.

ஜூவாண்டஸ் அணியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். ஜூவாண்டஸ்-சாஸுலோ அணிகள் மோதிய கால்பந்து போட்டி நேற்று நடந்தது.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் ஜூவாண்டஸ் அணி வீரர் கேடிரா முதல் கோல் அடித்தார். அதன் பின்னர் ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ரொனால்டோ தன்னிடம் வந்த பந்தை வேகமாக உதைத்தார்.

அந்த பந்து சக அணி வீரரான கேடிரா முகத்தை பலமாக தாக்கியது. இதில் கேடிரா நிலைதடுமாறி மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அவரது அருகில் சென்ற ரொனால்டோ தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

பின்னர் கேடிராவுக்கு பதிலாக ரோட்ரிகோ பெண்டான்கர் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து, 70வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலும், 86வது நிமிடத்தில் எம்ரே கேன் ஒரு கோலும் அடித்தனர்.

இதன்மூலம் ஜூவாண்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், கேடிரா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்றிரவு எனக்கு தலைவலி கொடுத்ததற்கு நன்றி ரொனால்டோ’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers