முன்னாள் அர்செனல் மற்றும் செவில்லா கிளப் அணிகளின் நட்சத்திரமான ஜோஸ் அண்டோனியோ ரையஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்செய்தியை அவர் விளையாடிய செவில்லா கிளப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 35 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் அண்டோனியோ, ஆர்சனல், அட்லிடிகோ மேட்ரிட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காகவும் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீமியர் லீக், லா லிகா உட்பட பல கோப்பைகளை கைப்பற்றிய அணியில் ஜோஸ் அண்டோனியோ விளையாடிவுள்ளார். ரையஸிக்கு,Noelia Lopez-யுடன் கடந்த யூன் 2017ம் ஆண்டு திருமணமானது, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ் அண்டோனியோ ரையஸின் மறைவுக்கு கால்பந்து வீரர்கள், ரசிகர்கள், கிளப் அணிகள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.