வன்புணர்வு வழக்கு எதிரொலி; நெருக்கடியில் நெய்மர்

Report Print Basu in கால்பந்து

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் மீது சுமத்தப்பட்டுள்ள வன்புணர்வு குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிரேசிலை சேர்ந்த இளம்பெண், சமூக வலைதளம் மூலம் பழகிய நெய்மர், தன்னை பாரிஸில் உள்ள ஓட்டலில் வைத்து வன்புணர்வு செய்து தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

இந்த வன்புணர்வு குற்றச்சாட்டை தொடர்ந்து, நெய்மரன் நிதியுதவியாளர்கள் சிலர் அவரது விளம்பர பிரச்சாரங்களை இடைநீக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக நெய்மரின் முகவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நெய்மரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தும் உரிமம் வைத்துள்ள என்.ஆர்.ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்மருடனான ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. எனினும், விளம்பர பிரச்சாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் விவரங்களை வழங்கவில்லை.

வெளிப்படையான காரணங்களுக்காக அனைத்து பங்குதாரர்களும் எச்சரிக்கையாக இருப்பதாக என்.ஆர்.ஸ்போர்ட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்