நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பம்

Report Print Vijay Amburore in கால்பந்து

நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் நெய்மர், பாரிஸ் ஹோட்டல் அறையில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கடந்த மே மாதம் நஜிலா என்கிற 26 வயது மொடல் அழகி குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு நெய்மர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நெய்மருடன் ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் வீடியோ காட்சியினை வெளியிட்டு மொடல் அழகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், இருவருக்குள்ளும் பாலியல் உறவு இருந்தது உண்மை. ஆனால் வன்கொடுமை நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த முடிவை வரவேற்று நெய்மரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்