நேர்காணலில் பியர்ஸ் காட்டிய வீடியோ... பார்த்து கண்ணீர் விட்டழுத ரொனால்டோ: தன் சோக கதையை பகிர்ந்தார்

Report Print Basu in கால்பந்து

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ, நேர்காணலின் போது தன்னுடைய தந்தை பேசும் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டழுத்துள்ளார்.

பிரித்தானியா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கான பியர்ஸ் மோர்கனுடனான நேர்காணலின் போதே ரொனால்டோ இவ்வாறு அழுதுள்ளார்.

நேர்காணலின் போது பியர்ஸ் மோர்கன், ரொனால்டோவின் தந்தை Jose Dinis Aveiro, அவரின் சாதனைகளைப் பற்றி பேசும் வீடியோவைக் காட்டியுள்ளார். இதைக்கண்ட ரொனால்டோ கண்ணீர் விட்டழுத்துள்ளார்.

ரொனால்டோவுக்கு 20 வயது இருக்கும் போது மதுபோதைக்கு அடிமையான தந்தை Jose Dinis Aveiro, கல்லீரல் செயலிழப்பால் 52 வயதில் உயிரிழந்துள்ளார்.

வீடியோவை கண்ட பின் பேசிய ரொனால்டோ, இந்த வீடியோவை இதுவரை நான் பார்த்ததே இல்லை. என்னால், நம்பமுடியவில்லை, என் தந்தை எனது திறமையை பற்றி புகழ்ந்து பேசியதை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதை எனது குடும்பத்தினருக்கும் காட்ட வேண்டும். ஆனால், என் தந்தையை குறித்து எனக்கு 100 சதவிதம் தெரியாது. அவர் குடிகாரர், இயல்பாக அவரிடம் நான் பேசியதே இல்லை.

(Image: ITV)

அம்மா, சகோதரர்கள், மகன் என என் குடும்பத்தினர் அனைவரும் நான் விளையாடுவதை பார்க்கிறார்கள், ஆனால் என் தந்தை எதையும் பார்க்கவில்லை, அவர் இளம் வயதிலே இறந்துவிட்டார் என வருத்தமடைந்தார் ரொனால்டோ.

மேலும், விரைவில் தனது அம்மாவின் ஆசை படி காதலி Georgina Rodriguez திருமணம் செய்ய உள்ளதாக ரொனால்டோ கூறினார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்