போட்டியின்போது தர்மசங்கடத்திற்குள்ளான பெண்.. எதிரணி வீராங்கனைகளின் செயல்! 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ

Report Print Kabilan in கால்பந்து

கால்பந்து போட்டி ஒன்றில் ஐக்கிய அரபு நாட்டு வீராங்கனையின் ஹிஜாப் கலைந்தபோது, எதிரணி வீராங்கனைகள் சூழ்ந்துகொண்டு உதவிய வீடியோ வைரலாகியுள்ளது.

ஜோர்டானில் மகளிர் கிளப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த போட்டி ஒன்றில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த கிளப் அணியான ஷபாப் அல் ஓர்டானும், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த அராப் ஆர்த்தடாக்ஸ் கிளப் அணியும் மோதின

இந்தப் போட்டியில், அராப் ஆர்த்தடாக்ஸ் அணியில் அனைத்து வீராங்கனைகளும், தலைமுடியை மறைக்கும் வகையிலான ஹிஜாப் அணிந்து ஆடினர். வெளியுலகிற்கு தலைமுடியை காட்டக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் இவ்வாறு விளையாடினர்.

பரபரப்பாக போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அராப் அணியின் வீராங்கனை ஒருவரின் ஹிஜாப் கலைந்தது. இதனால் அவர் தர்மசங்கடத்திற்குள்ளாகி நின்றுவிட்டார்.

உடனே பதற்றமாக அவர் இருந்ததைப் புரிந்து கொண்ட ஜோர்டான் கிளப் வீராங்கனைகள், விளையாடுவதை நிறுத்திவிட்டு அவரை சூழ்ந்துகொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. சுமார் 26 லட்சம் மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஜோர்டான் வீராங்கனைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த தொடரையும் ஜோர்டான் தான் வென்றது என்றாலும், இந்த செயலுக்காகவே அவர்கள் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்