34வது ஹாட்ரிக் கோல்.. ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த மெஸ்சி: அசத்தல் வீடியோ

Report Print Basu in கால்பந்து

லா லிகா தொடரில் செல்டா விகோ அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது 34வது ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ஸ்பெயினில் உள்ள Camp Nou மைதானத்தில் உள்ளுர் அணியான பார்சிலோனா அணியும்- செல்டா விகோ அணியும் மோதின. இப்போட்டியில், மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் உதவியுடன் பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவை வீழ்த்தியது.

23 வது நிமிடத்தில் பெனால்டி மூலம் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார், அதைத் தொடர்ந்து 45 + 1 மற்றும் 48 நிமிடங்களில் கோல் அடித்தார். பார்சிலோனாவுக்காக Sergio Busquets நான்காவது கோலை அடித்தார்.

இதன் மூலம், முன்னாள் ரியல் மாட்ரிட் வீரரும், தற்போது ஜுவென்டஸ் கிளப் அணியில் விளையாடி வரும் ரொனால்டோவின் ஹாட்ரிக் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.

லா லிகா தொடரில் Levante அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைக் கண்ட பார்சிலோனா தனது தற்போது எழுச்சிப்பெற்றுள்ளது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்