போர்ச்சுகல், ஜெர்மனி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு அணிகள் தகுதி

Report Print Kavitha in கால்பந்து

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூன், ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது.

இந்த கால்பந்து போட்டியில் போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் ‘பி’ பிரிவில் லக்சம்பர்க் சிட்டியில் நேற்று அரங்கேறிய கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, லக்சம்பர்க் அணியை சந்தித்தது போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதுள்ளது.

அந்த அணியில் புருனோ பெர்னாண்டஸ் (39-வது நிமிடம்), கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (86-வது நிமிடம்) கோலும் இதே பிரிவில் செர்பியா- உக்ரைன் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததுள்ளது.

இந்நிலையில் ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த உக்ரைன் (6 வெற்றி, 2 டிராவுடன் 20 புள்ளி), போர்ச்சுகல் (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளி) ஆகிய அணிகள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றதுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு மோன்செங்கிளாட்பாச் நகரில் நடந்த (சி பிரிவு) ஒரு ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரசை பந்தாடியது.

இதில் டோனி குரூஸ் 2 கோலும், ஜின்டர், கோரட்ஸ்கா தலா ஒரு கோலும் அடித்து ஒரு லீக் எஞ்சியுள்ள நிலையில் ஜெர்மனி அணி (6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 18 புள்ளி) யூரோ போட்டிக்கு தொடர்ந்து 13-வது முறையாக தகுதி பெற்றதுள்ளது.

இதே பிரிவில் வடக்கு அயர்லாந்து அணியுடன் டிரா கண்ட நெதர்லாந்து அணியும் (16 புள்ளி) யூரோ வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

மேலும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 17 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers