பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டியை நடத்திய கிளப்! 100 மில்லியன் அபராதம்...

Report Print Abisha in கால்பந்து

தென்கொரியாவில், கால்பந்து போட்டிகளில் ரசிகர்களுக்கு பதில் பாலியல் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்ததால் 100 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் கால்பந்து போட்டியான K-லீக் போட்டி கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனாவுக்கு பின் வழங்கப்பட்ட தளர்வுகளால், எஃப்சி சியோல் என்ற கிளப் போட்டிகளை துவங்கி நடத்தியது. அதில் பாலியல் பொம்மைகள் வைக்கப்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் எஃசி சியோலுக்கு K-லீக் 100மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

K-லீக்கின் அறிக்கைபடி இது, பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கு பெருத்த அவமானம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்